மகளிர் பிரீமியர் லீக்: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த சஜனாவின் வலி மிகுந்த கதை!

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை அணியின் வீராங்கனை சஜனாவின் கதை பலரையும் ஈர்த்துள்ளது.
சஜனா
சஜனாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் அணியை நேற்றிரவு (பிப்.23) வென்றது.

இதில் கடைசி ஓவரில் இரண்டு பந்தில் 5 ரன்கள் தேவையானபோது கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மீதமிருந்த ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவையானபோது 28 வயதான எஸ். சஜனா சஜீவன் எனும் வீராங்கனை சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இன்ஸ்டாகிராம்

எஸ். சஞ்சனா கேரளத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர். 28 வயதான சஞ்சனா ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். இவரைக்குறித்து எதிரணியின் பிரபல வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது இனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அவர் கூறிய பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ஜெமிமா கூறியதாவது:

நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. ஆனால் அறிமுகப் போட்டியில் சஜ்ஜு (சஞ்சனா) சிறப்பாக போட்டியை முடித்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சஞ்சனா. கேரள வெள்ளத்தில் எல்லாவற்றையும் இழந்தவர். 1 பந்துக்கு 5 ரன்கள் தேவையானபோது எளிமையாக சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இது என்ன மாதிரியான கதை என்பதை விடவும் அவர் என்ன மாதிரியான வீராங்கனை! எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அஞ்சனாவை பாராட்டி வருகிறார்கள். ஆண்களின் ஐபிஎல் போன்று மகளிர் பிரீமியர் லீக்கிலும் (டபிள்யூபிஎல்) கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் சஜனா சஜீவன்.
சிவகார்த்திகேயனுடன் சஜனா சஜீவன். இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com