4வது டெஸ்ட் : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு

இந்திய அணியின் சவாலான போராட்டம்: 192 ரன்கள் வெற்றிக்கு நோக்கி
4வது டெஸ்ட் : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராஞ்சி டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன், முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 2--அம் நாளான நேற்று(பிப்.24) பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் முதல் வரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக நடையைக் கட்டினர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் சேர்த்தார். சுப்மான் கில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், 3-ஆம் நாள்(இன்று பிப்.25) ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் பின் வரிசையில் களமிறங்கிய இந்திய அணியின் துருவ் ஜூரெல் அபாரமாக ஆடி 90 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த துருவ் ஜூரெல், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். தனது 2-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் துருவ், 10 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.டாம் ஹார்ட்லே பந்துவீச்சில் பவுல்ட் ஆகி வெளியேற முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 307 ரன்கள் சோ்த்தது.

குல்தீப் யாதவ் 28 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷோயைப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டாம் ஹார்ட்லே 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சென் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை இன்று(பிப்.25) விளையாடியது. ஆனால் இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் 3, குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன்மூலம் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் 24, ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com