
தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நடிகர் நவீன் வெற்றியின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த தொடரில் தீபக் தினகர், நக்ஷத்ரா நாகேஷ், ரேகா கிருஷ்ணப்பா, மீரா கிருஷ்ணா, நவீன் வெற்றி, லாவண்யா மாணிக்கம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இத்தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நவீன் வெற்றி. இதனைத் தொடர்ந்து கண்ணே கலைமானே தொடரில் நந்தா மாஸ்டருக்கு பதிலாக நவீன் வெற்றி பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் முன்னதாக நீலி, தேன்மொழி பி.ஏ., நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், நவீன் வெற்றி நாயகானாக களமிறங்கும் புதிய தொடர் ‘கண்மணி அன்போடு’. இத்தொடரின் நாயகி மற்றும் பிற கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதிர்வரும் நாள்களில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சி தொடர்களுக்கு பாடல்களின் பெயரே தற்போது வைக்கப்பட்டு வருகிறது. கண்ணே கலைமானே, பனி விழும் மலர்வனம் தொடர்களுக்கு அடுத்து ‘கண்மணி அன்போடு’ என்ற குணா படத்தில் இடம்பெற்றுள்ள பாடலே தொடரின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.