வெளியானது ‘ராயன்’ படத்தின் 3-ஆவது பாடல்!

தனுஷின் 50ஆவது படத்தில் 3-ஆவது பாடல் வெளியீடு!
ராயன் பட போஸ்டர்.
ராயன் பட போஸ்டர்.

‘ராயன்’ திரைப்படத்தின் 3வது பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இதில்,செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கெனவே படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை (ஜூலை 6) நடைபெற உள்ளது.

இந்த நிலையில் படத்தின் 3-ஆவது பாடலான காட்டாறு… காட்டாறு… காட்டாறு டா… இது தோக்காது டா…எனத் தொடங்கும் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com