அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும்: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்

தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும்
முன்னாள் சிலை  திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்
முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்

தஞ்சாவூா்: தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும் என முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூாில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள மிகவும் பழமையான காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த சோழா் காலத்தைச் சோ்ந்த சுமாா் இரண்டரை அடி உயரமுள்ள வீணாதரர் எனும் சிவன் ஐம்பொன் சிலை 1997 இல் திருட்டு போனது. இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

அந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் சிலை  திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல்
ஓபிஎஸ் அதிமுகவிற்கு உண்மையாக இருந்ததே கிடையாது: எடப்பாடி கே.பழனிசாமி

திருட்டு போன அந்த சிலை தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் உள்ள தனியார் விற்பனை கூடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சிலையை அந்த தனியார் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த சிலை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது சிரமம்.

எனவே அந்த சிலை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி, மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com