
சென்னை மெட்ரோ ரயில் நீல வழித்தடத்தில் திடீரென தீப்பொறி கிளம்பியதால் சில மணி நேரம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் சென்னை உயர் நீதிமன்ற நிறுத்தத்தில் திடீரென தீப்பொறி கிளம்பியது. பலத்த சப்தத்துடன் தீப்பொறி கிளம்பிய நிலையில் சென்னை சென்ட்ரல் நிறுத்தத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த ரயிலில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.