விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குப் பதிவு

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 12,94 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள் சகோதரி எஸ். நித்யா - எஸ். திவ்யா.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள் சகோதரி எஸ். நித்யா - எஸ். திவ்யா.
Published on
Updated on
2 min read

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 12,94 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்தவர் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள் சகோதரி எஸ். நித்யா - எஸ். திவ்யா.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில், இடைத் தேர்தலில் புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 12,94 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும், 17,062 ஆண் வாக்காளர்கள், 13,605 பெண் வாக்காளர்கள் என மொத்தமாக 30,667 பேர் வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஏராளமான முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

வாக்குப் பதிவை முன்னிட்டு 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.
முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

ஜூலை 13-இல் வாக்கு எண்ணிக்கை

வாக்குப் பதிவு முடிந்த பின்னர், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

தொடர்ந்து, அந்த அறைக்கு "சீல்' வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஜூலை 13-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com