
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 3 மணிவரை 64.44 சதவிகிதம் மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 73,781 ஆண்களும், 78,949 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 1,57,231 பேர் வாக்களித்துள்ளனர்.
இதற்கிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வாக்குச்சாவடி ஒன்றில் குளவிகள் நுழைந்ததால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டி.கொசப்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க நின்று கொண்டிருந்த பெண்ணை, அவரது முன்னாள் கணவர் கத்தியால் குத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.