அன்ஷுமன் கெய்க்வாட்.
அன்ஷுமன் கெய்க்வாட்.

அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

முன்னாள் வீரர் கெய்க்வாட் மருத்துவ செலவுக்கு பிசிசிஐ நிதி உதவி
Published on

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டின் மருத்துவ செலுவுக்கு பிசிசிஐ சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்க அதன் செயலர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.

1974 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் அன்ஷுமன் கெய்க்வாட். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பின்னர் ஓய்வு பெற்ற அவர் இரண்டு முறை இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தற்போது 71 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாக இரத்தப் புற்று நோயால் அவதியுற்று வருகிறார். இதனிடையே புற்றுநோயால் அவதிப்படும் அன்ஷுமனுக்கு பிசிசிஐ உதவ வேண்டும்.

அவ்வாறு உதவ முன்வராவிட்டால், தனது ஓய்வூதியத்தை வழங்குவதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டின் மருத்துவ செலுவுக்கு பிசிசிஐ சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்க அதன் செயலர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கெய்க்வாட்டின் உடல்நிலை குறித்த முன்னேற்றத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும்.

அவர் இந்த கட்டத்தில் இருந்து வலுவாக வெளியே வருவார் என்று நம்பிக்கை உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் கெய்க்வாட்டின் குடும்பத்திற்கு வாரியம் துணை நிற்கிறது. அவர் விரைவில் குணமடைய தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com