
புதிய பயனாளர்களாக சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப். 15-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 1.16 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என்று, ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை, இந்த 10 மாதங்களில், தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 11 ஆயிரத்து 323 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று முன்னதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அத்துடன் உரிமைத் தொகை கோரி, மேல்முறையீடு செய்யப்பட்டவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தவர்களுடன் சேர்த்து, புதிதாக தேர்வான 1.48 லட்சம் பேருக்கும் இன்று ரூ. 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் இ-சேவை மூலமாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.