
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகிய நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் தற்சமயம் நீர் இருப்பு 98 அடியாக உள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நான்கு மதகுகள் வழியாக பில்லூர் அணை வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே கரையோர கிராமங்களான தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணித் துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது என்றும், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.