
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுதில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஜூலை 24 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீா் விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவை கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடக அரசு கூறியது.
இந்த சூழலில், ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.