பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சூதுபவள மணிகள்.
பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சூதுபவள மணிகள்.
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் கிடைத்துள்ளது. 

முழுமை பெறாத வடிவத்தில் உள்ள இந்த மணிகள் கிடைத்துள்ள நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதிக்குள் மணிகள் தயாரிப்புக் கூடம் இருந்திருக்கலாம் என அகழாய்வுத் தள இயக்குநர் த. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்களும் கிடைத்தன.இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சூதுபவள மணிகள்.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சில நாட்களுக்கு முன்பு 4 செம்பு ஆணிகளும், ஒரு அஞ்சனக்கோலும் கிடைத்தது. மேலும், கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், அக்கேட் (Agate), சூது பவளம் (Carnelian), செவ்வந்திக் கல் (Amethyst) என செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை 470 கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. 

இதில், இரண்டு சூது பவள மணிகள் (நீளம் -0.7 செ.மீ, விட்டம்- 1.1 செ.மீ, எடை 0.77 கிராம்), (நீளம்- 0.7 செ.மீ, விட்டம்- 0.3 செ.மீ, எடை - 0.22 கிராம்) கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இதில், ஒரு மணி முழுமை பெற்ற நிலையிலும், மற்றொன்று முழுமை பெறாத நிலையிலும் உள்ளன. இதேபோல அக்கேட் வகை மணி ஒன்றும் (நீளம் 0.2 செ.மீ, விட்டம் 0.4 செ.மீ, எடை 0.04  கிராம்) கிடைத்துள்ளது. இது துளையிடத் தொடங்கி முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

முழுமையானதாகவும் முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக்கோட்டையில் உள்நாட்டு வணிகம் செழித்திருந்ததையும், மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இதேப் பகுதியில் இருந்ததற்கான சான்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதேபோல, கடந்தாண்டு உடைந்த நிலையில் வட்ட வடிவ சூதுபவள மணி ஒன்று கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சூதுபவள மணிகள்.
பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சூதுபவள மணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com