
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூா் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூா் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பாக, நீலகிரி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சயன், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள உதயன் மற்றும் தீபு ஆகியோர் ஜூலை 25 ஆம் தேதியும். ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30 ஆம் தேதியும் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.