
வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயற்சி செய்த போது இந்திய ராணுவ வீரர்கள் வீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
இந்தப் போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “25 ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த நமது வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.
நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.