
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்குகிறது என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் கோத்தபய ராஜபக்சே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பிரதமராக மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகினர்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கே மற்றும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனா தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் இலங்கை தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவு பெறுவதையொட்டி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும், வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவும் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்த தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.