புதிய பொறுப்பு, அதிக எதிர்பார்ப்பு..! கம்பீருக்கு ஆலோசனை வழங்கிய திராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கு முன்னாள் பயிற்சியாளர் திராவிட் உருக்கமாக பேசியுள்ளார்.
கௌதம் கம்பீர், ராகுல் திராவிட்.
கௌதம் கம்பீர், ராகுல் திராவிட். படங்கள்: பிசிசிஐ / எக்ஸ்
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்கணால் நடத்தப்பட்டது. பலரும் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இலங்கையுடன் நடக்கும் தொடர் முதல் கம்பீர் பயிற்சியாளராக செயல்படுவார். இதற்கு முன்னாள் பயிற்சியாளர் திராவிட் உருக்கமாக பேசியுள்ளார். அதில் கூறியதாவது:

கௌதம் கம்பீர், ராகுல் திராவிட்.
ஃபின் ஆலன் சதம்: டிஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது சான்பிரான்சிஸ்கோ அணி!

ஹலோ கௌதம் கம்பீர், நமது உலகத்தின் சிறந்த வேலையான இந்திய அணியின் பயிற்சியாளர் வேலைக்கு உங்களை வரவேற்கிறேன். 3 வாரங்களுக்கு முன்பு எனது பணிகாலம் முடிவடைந்தன. எனது கனவையும் மீறி பார்படோஸ், மும்பையில் நடந்தவை எல்லாமே மறக்க முடியாத தருணங்கள். இவை எல்லாவற்றையும்விட நான் அணியுடன் ஏற்படுத்திக்கொண்ட நினைவுகளும் நட்பும்தான் பெரியது.

இந்திய அணியின் பயிற்சியாளராகும் உங்களிடமும் இதையேதான் எதிர்பார்க்கிறேன். எல்லா வகையான அணியிலும் முழு உடல்தகுதியுடைய வீரர்கள் அமைய வாழ்த்துகிறேன்.

உங்களுக்கும் அதிர்ஷடம் இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். பயிற்சியாளர்களான நாம் சிறிது அறிவாகவும் திறமை வாய்ந்தவராகவும் காட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.

கௌதம் கம்பீர், ராகுல் திராவிட்.
அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி உண்மையா? பதிலளித்த அஜித்தின் மேலாளர்!

உனது அணியில் இருந்த நபராக எனக்கு உங்களைப் பற்றி தெரியும். ஆடுகளத்தில் உங்களால் முடிந்த அனைத்தையும் தருவீர்கள். சக வீரராக உங்களது விடா முயற்சி பற்றியும் தெரியும். பல ஐபிஎல் தொடர்களில் ஊடாக உங்களுக்கு இருக்கும் வெற்றி மீதான வேட்கை, வீரர்களிடம் இருந்து சிறந்தவற்றை எப்படி கொண்டுவருவதென உங்களுக்கு தெரியும்.

இந்திய கிரிக்கெட் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம், அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். இந்தப் புதிய பணியிலும் நீங்கள் அதைக் கொண்டு வரவேண்டும். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது, கூர்ந்தாய்வு தீவுரமாகவும் இருக்கும். உங்களது மோசமான நாள்களிலும் நீங்கள் தனித்திருக்கமாட்டீர்கள். பல இக்கட்டான சூழலில் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியேற்று, சற்று ஒதுங்கி இரு, உனக்கு கடினமாக இருந்தாலும் சிரி. என்ன நடந்தாலும் அது மக்களை பாதிக்கும் என்றார்.

இதற்கு கம்பீர், “நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நீங்கள் நான் பார்த்ததிலேயே மிகவும் சுயநலமற்ற மனிதர். எனக்கு எப்படி பதில் சொல்வது என்பதுகூட தெரியவில்லை. நீங்கள் கூறியது அனைத்தும் எனக்கும் மிகவும் பெரிய வார்த்தைகள். நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன்” என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com