எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பார்க்கிறது மோடி அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குகிறது.
chidambaram
chidambaram
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குகிறது என்றும் எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்திலும் பேச விடுவதில்லை, நீதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை ஒடுக்குகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலும் பேச விடுவதில்லை, நீதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவதில்லை.பேசினால் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பேசவிடாமல் நிறுத்தப்பட்டதால், நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக் கூறினார்.

பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், அவர்களின் குரலை தொடர்ந்து ஒடுக்குவதிலும் குறியாக இருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது என்றார். “ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச விரும்பும் ஒரு முதல்வரை ஏன் நீதி ஆயோக் கூட்டத்தில் பேச அனுமதிக்க முடியாது,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நடத்தப்பட்ட ​​தேசிய வளர்ச்சி கவுன்சில் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில், அப்போது இதே பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 15 முதல் 25 நிமிடங்கள் வரை எப்படிப் பேசினார், அப்போது ஒரு குறுக்கிடோ அல்லது பேசவிடாமல் நிறுத்தப்பட்டவோ இல்லை என சிதம்பரம் கூறினார்.

chidambaram
புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒரு எதிர்க்கட்சி முதல்வர் ஐந்து நிமிடம், 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது. இந்த சம்பவத்தின் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் பாஜக அரசின் வழக்கம் இதன் மூலம் தெளிவாகிறது, இது "கண்டனத்திற்குரியது" என்று அவர் கூறினார்.

மேலும் கடந்த 2021 இல் மத்திய அரசின் 2021-22-க்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளுக்கு ரூ.63,246 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்படும் என அறிவித்தார். இவை அவரது உரையில் பத்தி 59-இல் இடம் பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

முதல்வரின் பேச்சுக்கு மத்திய அரசு குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார் என சிதம்பரம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com