வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு!

மலேசியாவில் பணிபுரிவதற்கான அறிவிப்பு.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து தமிழக அரசு சார்பில் செய்தி வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மலேசியாவில் பணிபுரிய Construction Worker, Construction (Helper) மற்றும் Welder ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள, பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதிற்கு உட்பட்ட Construction Worker, Construction (Helper) மற்றும் Welder தேவைப்படுகிறார்கள்.

Construction Worker ஆகிய பணிக்கு ரூ.50,000/- ஊதியமாகவும் Construction (Helper) ரூ.28,000/-ஊதியமாக வழங்கப்படும் மற்றும் Welder (Welder qualifying Test) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

தமிழக அரசு
மினிமம் பேலன்ஸ் அபராதம்: 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி வசூலித்த வங்கிகள்!

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 03/08/2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com