பீகாரில் தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்று, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 5 வயது சிறுவனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரின் சுபால் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படித்துவரும் 5 வயது சிறுவன் பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்று, 3 ஆம் வகுப்பு மாணவரை சுட்ட சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைஷவ் யாதவ் கூறுகையில், ‘‘அதேப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவரை நோக்கி சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தோட்டா மாணவரின் கையில் பட்டது.
காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். கையில் காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பைகளை சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்தச் சம்பவம் பெற்றோர், பாதுகாவலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.