
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் பிஷ்ணு பதா ரே, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் குல்தீப் ராய் சர்மாவைவிட 21,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
பிஷ்ணு பதா ரே 43,058 வாக்குகளும், குல்தீப் ராய் சர்மா 21,062 வாக்குகளும் பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள ஜவஹர்லால் நேரு ராஜ்கீய மகாவித்யாலயாவில் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.