
தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லாவும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தியும் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
பாரமுல்லா மக்களவைத் தொகுதியில், சிறையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஷேக்அப்துல் ரஷீத், முன்னாள் முதல்வர் அப்துல்லாவை எதிர்த்து 2,05,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
முன்னாள் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் 4,67,006 வாக்குகளும், ஒமர் அப்துல்லா 2,61,419 வாக்குகளும் பெற்றனர்.
இதுகுறித்து ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளர் ரஷீத்துக்கு வாழ்த்துகள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். வாக்காளர்கள் பேசுகிறார்கள். ஜனநாயகத்தில் அதுதான் முக்கியம். அவரது வெற்றி அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் என்று நான் நம்பவில்லை. இதனால் வடக்கு காஷ்மீர் மக்களுக்கு உரிமையுள்ள பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியும் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு தலைவர் மியான் அல்தாப் 2,38,210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு தலைவர் மியான் அல்தாப் 5,17,489 வாக்குகளும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி 2,38,210 வாக்குகளும் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.