
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்குக் கீழே சரிந்துவிட்டதாக சமீபத்திய முடிவுகள் காட்டுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலில் தார்மிகமான தோல்வியாக இருக்கும் என்பது தெளிவாகிவிட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் பெரும்பான்மை பெறவில்லை.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்று சனிக்கிழமை கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், ”கருத்துக் கணிப்புகள் என்னவென்பது முற்றிலும் அம்பலமாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை. பிரதமர் மோடி திட்டமிட்டு நடத்திய கருத்துக் கணிப்புகள் முழுக்க முழுக்க அம்பலமாகிவிட்டன என்பதும் தெளிவாகிவிட்டது. து பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலில் தார்மிகமான தோல்வியாக இருக்கும் என்பது தெளிவாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஒடிஸா, தெலங்கானா மற்றும் கேரளத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற போதிலும், பிஜேபி 240 இடங்களில் முன்னிலையுடன் பெரும்பான்மைக்குக் கீழே வந்தது போல் தோன்றியது. ஆனால், வடமாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது பாஜகவுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.