ஓப்போ செல்போனில் செய்யறிவு நுட்பம்!

ஓப்போ நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் செய்யறிவு அம்சங்கள் அறிமுகப்படுத்தவுள்ளது.
படம்| ஓப்போ இணைய தளம்
படம்| ஓப்போ இணைய தளம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஓப்போ, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் செய்யறிவு அம்சங்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவுள்ளது.

ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் தனியுரிம தொழில்நுட்பங்களை உருவாக்க செய்யறிவு (AI) ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது.

இது கூகுள், மைக்ரோசாப்ட், மீடியா டெக், குவால்காம் போன்ற சிப்செட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து அன்றாடப் பயன்பாட்டிற்கு அதிக செய்யறிவு(AI) அம்சங்களை வழங்க உள்ளது.

படம்| ஓப்போ இணைய தளம்
புதிய செல்போன் வாங்கப் போறீங்களா? ஜூனில் வந்த போன்கள் பற்றி...

பிப்ரவரியில், ஓப்போ நிறுவனமானது, சீனாவின் ஷென்செனில் ஓப்போ செய்யறிவு (AI) மையத்தை நிறுவுவதாக அறிவித்தது.

ஓப்போ நிறுவனம் இந்த ஆண்டு தனது ஃபோன்களில் 100-க்கும் மேற்பட்ட செய்யறிவு (AI) திறன்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பட செயலாக்கம், கணினி பார்வை, பேச்சுத்திறன் தொழில்நுட்பம், இயற்கை மொழி செயலாக்கம், இயந்திர கற்றல் போன்ற துறைகளில் செய்யறிவு (AI) திறன்களின் முறையான வளர்ச்சியை ஆதரிக்க முடியும்.

ஓப்போ நிறுவனம் செய்யறிவு (AI) இமேஜிங்கிற்காக மட்டும் 3,796 காப்புரிமைகள் உள்பட உலகளவில் 5,399 செய்யறிவு (AI) காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது.

ஓப்போ பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் உரைகளை உருவாக்க, உரைகளை மொழிபெயர்க்க, முகவரிகளைத் தேடுவதற்கு டெஸ்க்டாப் கோ-பைலெட்டைப் பயன்படுத்திகொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com