
புது தில்லி: கடந்த 2019-லிருந்து இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் விற்பனை செய்யப்படாமல் நிறுவனங்களிடம் இருப்பாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் இந்தியாவின் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத் ஆகிய 7 நகரங்களில் விற்பனையாகாமல் மனை-வணிக நிறுவனங்களின் கைவைசம் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 4,68,000-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 2019 டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகம்.
விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மதிப்பின் அடிப்படையில் விற்பனையாகாத வீடுகளின் கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பாண்டின் முதல் காலாண்டில் வீடுகள் விற்பனையாவதற்கான கால இடைவெளி 22 மாதங்களாகக் குறைந்துள்ளது.
2019-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இது 32 மாதங்களாக இருந்தது. வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்தது இந்த முன்னேற்றத்துக் காரணமாக அமைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.