
தனது வாழ்க்கையை நாட்டுக்காவே அர்ப்பணித்துள்ளார் பிரதமர் மோடி என்று பாஜ தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நட்டா,
அனைவருக்கும் அனைத்தும் என்று நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வளர்ச்சியை மோடி வழங்கியுள்ளார் என்றும் அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.