ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகவே தொடர்கிறது.
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்
Published on
Updated on
2 min read

மும்பை: பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகவே தொடர்கிறது. உள்நாட்டிலும் உலக அளவிலும் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

பணவீக்க வளர்ச்சி சமநிலை சாதகமாக நகர்கிறது. வளர்ச்சி உறுதியாக உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து மிதமாக உள்ளது. இது ஏப்ரல் 2024 இல் நடப்பு தொடரில் மிகக் குறைந்த அளவை எட்டியது. உணவுப் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனால், அது வளர்ச்சியை பாதிக்காமல், பணவீக்கத்திற்கு எதிராக, குறிப்பாக உணவுப் பணவீக்கத்தின் பாதையை சீர்குலைக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புடன் உள்ளது. எனவே, பணவீக்கக் கொள்கையானது தொடர்ந்து பணவீக்கத்தை நிலைநிறுத்துவதுடன், 4 சதவீகிதம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரும்பான்மை முடிவின் படி, ரெப்போ விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகவே தொடர்கிறது. உள்நாட்டிலும் உலக அளவிலும் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை (எஸ்டிஎப்) விகிதம் 6.25 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவீதமாகவும் இருக்கும்.

"பணவீக்கக் கொள்கை தொடர்ந்து பணவீக்கமற்றதாக இருக்க வேண்டும் மற்றும் வலுவான அடித்தளத்தை விட நிலையான விலை நிலைத்தன்மையை நீடித்த அடிப்படையில் 4 சதவீத இலக்குக்கு பணவீக்கத்தை சீரமைப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்" என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ்
தங்கம் விலை மீண்டும் உயா்வு: பவுன் ரூ.54,720-க்கு விற்பனை

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது. இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த ஆளுநர், நடப்பு 2024-25 நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்து ரிசர்வ் வங்கி அதன் வளர்ச்சிக் கணிப்புகளைத் திருத்தி அமைத்துள்ளது.

அதன்படி, முதல் காலாண்டு வளர்ச்சி 7.3 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டு 7.2 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டு 7.3 சதவிகிதம் மற்றும் நான்காம் காலாண்டு 7.2 சதவிகிதம் இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வளர்ச்சிக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் சமமாக சமநிலையில் உள்ளன என சக்திகாந்த தாஸ் கூறினார்.

ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கங்களை சமநிலைப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையான அணுகுமுறையைக் குறிக்கிறது.

காலநிலை மாற்றம் அரசியல் பதட்டங்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று விளைவுகளால் எழும் நிச்சயமற்ற தன்மைகளுடன் உலகப் பொருளாதாரம் சிக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com