வறண்ட காவிரி! மேட்டூர் அணை திறக்கப்படாத ஜூன் 12!

மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
வறண்ட  மேட்டூர் அணை(கோப்புப்படம்)
வறண்ட மேட்டூர் அணை(கோப்புப்படம்)

மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, நீர் பரப்பு 152 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது.

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி நீா் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணையின் கொள்ளளவு மிகவும் குறைந்தே உள்ளது.

வறண்ட  மேட்டூர் அணை(கோப்புப்படம்)
ஜூன் 14-க்கு பிறகு தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பேருந்துகளுக்கு தடை

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும், அணைக்கு வரும் நீர் வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 404 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியிலிருந்து 43.52 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 390 கன அடியிலிருந்து வினாடிக்கு 404 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 13.97 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com