
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஜூலை 10-இல் நடைபெறும் எனவும், வேட்புமனு தாக்கல் ஜூன் 14-இல் தொடங்கும் எனவும், இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்ததாவது:
நடைபெற்ற பாமக நிர்வாகக்குழுக் கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.