நீட் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேரில் தமிழர்களே இல்லை!

1563 மாணவர்களில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

1563 மாணவர்களில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது முதலமைச்சர் 2016 ஆம் ஆண்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தார், ஆனால் ஜெயலலிதா இருந்தவரை கூட நீட் தேர்வு நடைமுறைக்கு வரவில்லை.

ஆனால், 2017 -ல் எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தோம்.

நீட் தேர்வில் குழப்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு 67 பேர் முழு முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சிலருக்கு 718 ,719 என மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு சாத்தியம் இல்லை.

இவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றார்கள்.

சாத்தியமில்லாத வகையில் 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

கோப்புப்படம்
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

உச்ச நீதிமன்றத்தில் 2018 இல் வந்த தீர்ப்பின் படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மறு தேர்வு விரும்பினால் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது எப்படி சாத்தியம், எங்கு தவறு நடந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறு தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்ட 1563 மாணவர்களில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தவிர்த்து மீண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், கட் ஆஃப் மதிப்பெண்கள் தெரியவரும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com