
சென்னை: 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.
2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு,மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரச உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.