இந்தியா, கனடா போட்டி மழையால் ரத்து!

இந்தியா, கனடா போட்டி மழையால் ரத்து!

Published on

மைதானத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக இந்தியா-கனடா அணிக்கு இடையேயான போட்டி கைவிடப்படடது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை இன்று எதிர்கொள்ளவிருந்தது. ஃபுளோரிடாவில் நடைபெறவிருந்த இந்த ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கெனவே தான் விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றதன் மூலம் ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 ஆட்டகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com