
பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையிலே இடைத் தோ்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில்,
விக்கிரவாண்டி இடைத் தோ்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவானது மேலிடத்தின் உத்தரவு.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையிலே, 'மேலிடத்தில்' இருந்து உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே தெளிவான சான்று.
பாஜகவும், அதிமுகவும் இடைத் தோ்தல் களத்தில் பாமக எனும் தங்களது பிரதிநிதி மூலமாக எதிா்கொள்கின்றன. பாமகவை வெற்றிபெற வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என தெரிவித்துள்ள சிதம்பரம்,
இந்த இடைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளாா்.
இபிஎஸ் பதில்
ப.சிதம்பரத்திற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? இடைத்தேர்தலில் நிற்பதும், நிற்காமல் இருப்பது எங்களுடைய முடிவு என ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.