இந்தியாவில் இவிஎம் ஒரு கருப்புப் பெட்டி: எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் ஆதரவு

இந்தியாவில் இவிஎம் ஒரு கருப்புப் பெட்டி என்று எலான் மஸ்க் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவில் இவிஎம்(மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) ஒரு கருப்புப் பெட்டி என்று எலான் மஸ்க் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்(இவிஎம்) ஒரு கருப்புப் பெட்டி, அவற்றை சோதனை செய்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன.

பொறுப்புத்தன்மை இல்லாத நிறுவனங்கள் உள்ள போது ஜனநாயகம் ஒரு போலியாதானகவும், மோசடிக்கு உள்ளானதாகவும் மாறுகிறது" என்று எலான் மஸ்க்கின் பதிவை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
81 வயதில் ரயில் ஓட்டுநராக பணிபுரியும் மூதாட்டி!

எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால்(ஏஐ) ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், இன்னுமும் மிக அதிகமாகவே உள்ளது" என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com