

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோல்வியை தழுவியதால் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் ஆட்டம் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் மேக்முல்லன் 64, பெரிங்டன் 42 ரன்கள் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் வார்னர் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த மார்ஷ் 8, மேக்ஸ்வெல் 11 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி ஒருகட்டத்தில் தடுமாறியது. இருப்பினும் பின் வரிசையில் வந்த ஸ்டாய்னிஸ், டிராவிஸ் ஹெட்டுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 68, ஸ்டாய்னிஸ் 59 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், குருப் பி பிரிவில் 5 புள்ளிகளுடன் இருந்த நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணியும் 5 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், அந்த அணிக்கு ரன்ரேட் இல்லாத காரணத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.