
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் நா.புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இடைத்தோ்தலுக்கான அறிவிப்பை ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, ஜூலை 10-ஆம் தேதி தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14-இல் தொடங்கும். ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதைத் தொடர்ந்து இந்த தொகுதியில் ஜுலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜூன் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 5 சுயேச்சை வேட்பாளர்களும், ஜூன் 15-ஆம் தேதி ஒருவரும், ஜூன் 18- ஆம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேரிடம் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவருடன் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், துரை. ரவிக்குமார், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கெளதமசிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் க.பொன்முடி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
முன்னதாக, விக்கிரவாண்டி கடை வீதிப் பகுதியில் கட்சியின் தலைமைத் தேர்தல் பணிமனையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
நிகழ்வில் அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சி.வெ. கணேசன், பேரவை உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகு வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.