
கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பிப்பதற்கான , அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.), 4 ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்., பி.டெக். படிப்புகளுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அயல்நாடு வாழ் இந்தியா், அவா்களின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா், அயல்நாட்டினா் ஆகியோருக்கான இடங்களுக்கு வரும் ஜூலை 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 ஆம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.