மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஆதிர் ரஞ்சன் சௌதுரி விலகல்!

தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சௌதுரி விலகினார்.
தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சௌதுரி விலகியது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்செயலாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து 35 நிமிடம் பேசிய ஒரு நாள் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநில காங்கிரஸ் கமிட்டியுடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதிர் ரஞ்சன் சௌதுரி அறிவித்துள்ளார்.

இருப்பினும், அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவருக்குப் பின் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்ற யூகங்கள் ஏற்கனவே வெளியாகின.

சமீபத்தில் நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெரியளவில் வெற்றிபெறாததை அடுத்து தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் மல்தஹா தக்சின் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இஷா கான் சௌதுரி மட்டும் வெற்றி பெற்றார். மீதமுள்ள 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

தேர்தல் தோல்விக்கு பிறகு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
தோ்வு முறைகேடுகளை தடுக்க கடும் சட்டம்: மத்திய அரசு அமல்

பெஹ்ரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதுரி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுசுப் பதானிடம் 85 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதையடுத்து “நான் ஒரு தற்காலிக மாநில காங்கிரஸ் தலைவர். முழு நேர தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்" என ஆதிர் ரஞ்சன் சௌதுரி தெரிவித்தார்.

முர்ஷிதாபாத் மாவட்டம் பெஹ்ரம்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சௌதுரி இந்த முறை திரிணமுல் காங்கிரஸின் பிரபல வேட்பாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யுசுப் பதானிடம் தோல்வியை தழுவினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக திரிணமுல் கட்சியுடனான கூட்டணி தொடர்பாக சௌதுரிக்கு கட்சியின் உயர்நிலைக் குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளியானது.

சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி கட்சிகளுடன் தேர்தல் புரிந்துணர்வைக் கொண்டிருப்பது குறித்த தனது கருத்துகளை ஆதிர் தெரிவித்து வந்தார். மக்களவைத் தேர்தலின் போது மல்லிகார்ஜுன கார்கே உடனான கருத்து வேறுபாடுகள் குறித்தும் தகவல்கள் வெளியானது.

ஆதிர் ரஞ்சன் சௌதுரி 2012 முதல் 2014 வரை ரயில்வே இணை அமைச்சராகழும், 2019 முதல் 2024 வரை மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com