
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் பாம்புகளால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 32 ஆவது வார்டு விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி உள்ளது.
தற்போது இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு
வருவதால் அங்கு வசிப்பதற்கே அச்சமாக உள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தப்பகுதியில் குழந்தைகள் விளையாடவே முடியாத சூழல் நிலவுவதாகவும், நடந்து செல்லவே பயமாக இருப்பதாகவும்,அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுவதாக தெரிவித்தனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அந்த பகுதி மக்கள், அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் தண்ணீர் தொட்டி இருக்கின்ற இடத்தில் புதர் மண்டி கிடக்கும் அடா்ந்த பகுதியை மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால்வாரிய பணியாளர்களோ விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த பகுதி மக்கள், அப்படி செய்தால் தான் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்கும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.