
புதுதில்லி: தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 56-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா, ராகுல் மற்றும் கார்கே அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 56-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா, ராகுல் மற்றும் கார்கே ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேசாமல் மௌனமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு இவ்வளவு பெரிய சாவு நடந்தும் தமிழகத்தில் இன்னும் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனைகள் நடைபெற்றுதான் வருகின்றன. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான முக்கியமானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு பெரிய இறப்புக்கு திமுகவே காரணம். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 32-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதால் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்தது மரணம் அல்ல,கொலை என்று சம்பித் பத்ரா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.