
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உத்தரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு யார் காரணம் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 26) நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
மாநில அரசுகள் தங்களுடைய வரி விதிக்கக்கூடிய அதிகாரங்களை விட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் 30-6-2022-க்குப் பிறகு இனிமேல் அந்த வரியை நமக்குக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு இழப்பீட்டை நிறுத்தியதன் காரணமாக ஏறத்தாழ ரூ. 20,000 கோடி நமக்கு இன்றைக்கு வரவேண்டியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் நமக்கு மேலே போகிறது; உத்தரப் பிரதேசத்திற்கு பின்னால் நாம் போகிறோம் என்று சொன்னால், சூத்திரதாரி யார் என்பதை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள்.
யார் கயிறை இழுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உத்தரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு யார் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்களும் அறிவோம்; நாங்களும் அறிவோம்; இங்கே இருக்கக்கூடிய நாட்டு மக்களும் அறிவார்கள். இந்த ஜிஎஸ்டி-ஐப் பொறுத்தமட்டில், நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வரியை நீங்கள் பெற்றுத் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் பதில் அளித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.