
திருமணமான பெண்களை பணியமா்த்த மறுப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியமா்த்த மறுப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், திருமணமான பெண்களைப் பணியமர்த்த மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், “ சமீபத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணம் ஆகாத பெண்கள்” என்று தெரிவித்துள்ளது.
“திருமணமான பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் இல்லை, பாதுகாப்புக் காரணத்திற்காக பாலினம் மற்றும் மதத்தை பார்க்காமல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் அணிய அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.