
பாபநாசம் அருகே மூடப்படாமல் இருந்த, மழைநீர் வடிகால் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு (53) என்பவர் ஓட்டி வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்த மாதவராஜ் (47) என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார்.
பேருந்து தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான பாபநாசம் அருகே கீழவழுத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு மாதக் கணக்கில் பணிகள் முடிக்கப்படாமல், தோண்டப்பட்டிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இதில், அந்த பேருந்தில் பயணம் செய்த 30-பயணிகளும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரும் நல்வாய்ப்பாக எவ்வித காயங்களும் இன்றி உயிர்த்தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்து விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.