புதுதில்லி: அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
நீட் தேர்வு குறித்து எதிர்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவுவெடுத்த பின் வியாழன் இரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாகிவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜகவின் ஜனநாயக மரபு.
இந்தச் செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்.
"நீட் முறைகேடு" "நீட்டே ஒரு முறைகேடு தான்" இதனை அவசர பிரச்னையாக அவையில் விவாதிக்க வேண்டுமென வெள்ளிக்கிழமை ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க நாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார் சபாநாயகர் .
அவையைக் கூட ஒத்திப் போடுவோம் ஆனால் நீட்டைப் பேச மாட்டோம் என்றால் அதன்பின் உள்ள அதிகாரம் யாருடையது ? என்று வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.