முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரெளபதி முர்மு வாழ்த்து

இந்த நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும்,மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் அருளட்டும் என தெரிவித்துள்ளார்.

மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

முதல்வர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜரிவால்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

தேஜஸ்வி யாதவ்

பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அருள்வாராக! என தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கட்டும் என என தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றி

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே!

ஒடுக்கப்பட்டோரையும் பாட்டாளிகளையும் உயர்த்தும் நம் சீரிய முயற்சியில் திராவிடம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் ஆழமான கொள்கைகளால் ஊக்கம் பெற்றுக் கரம் கோப்போம்!

நாம் இருவரும் கூட்டாக இணைந்து நமது மாண்புக்குரிய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாத்துப் போற்றுவோம்! இந்த பயணத்தில் உங்களது ஆதரவும் ஊக்கமும் அளவிட முடியாதது! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, சரத் பவார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com