ரூ.50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,090-ஐ தாண்டியது. ஒரு பவுன் ரூ. 48,720-ஐ கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.500 உயர்ந்தது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.500 உயர்ந்தது!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,090-ஐ தாண்டியது. ஒரு பவுன் ரூ. 48,720-ஐ கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. வார இறுதிக்குள் பவுன் ரூ. 50,000- ஐ கடக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

தங்கம் விலை கடந்த 7 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 வரை உயா்ந்து பவுன் ரூ.48,720-ஐ தாண்டியுள்ளது.

புதிய உச்சம்: செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயா்ந்து ரூ.6,015-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ. 48,120-க்கும் விற்பனையாகி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது தங்கம்.

இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.6,040-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ. 48,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.6,090-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ. 48,720-க்கும் விற்பனையாகிறது. தொடர் விலை உயர்வால் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியள்ளது தங்கம்.

என்ன காரணம்?: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியது. மேலும், பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, அங்கு வட்டிவீதம் குறைக்கப்படாதது. சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இதன்மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும், அடுத்த சில நாள்களில் பவுன் ரூ. 50,000-ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் ஆபரணத் தங்கம் விலை கடந்து வந்த பாதை (ஒரு பவுன் விலை)

ஆண்டு விலை

1975 - ரூ.432

1980 - ரூ. 1,136

1985 - ரூ. 1,544

1995 - ரூ. 3,600

2000 - ரூ. 3,480

2005 - ரூ. 4,640

2010 - ரூ. 15,448

2015 - ரூ. 18,952

2020 - ரூ. 37,792

2021 - ரூ. 36,152

2022 - ரூ. 41,040

2023 (டிச.31) - ரூ. 47,280

2024 (மாா்ச் 5) - ரூ. 48,120

2024 (மார்ச் 7) ரூ.48,720

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com