முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: மின் உற்பத்தி தொடக்கம்

லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் (கோப்பு படம்)
லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் (கோப்பு படம்)

கம்பம்:முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 5 இல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் இரச்சல் பாலம் வழியாக குடிநீர் மற்றும் கால்நடைகளுக்களின் தேவைக்காக 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

தற்போது வெள்ளிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் (கோப்பு படம்)
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியத்தில் வேலை : விண்ணப்பிப்பது எப்படி?

மின் உற்பத்தி தொடக்கம்

கடந்த மார்ச் 5 இல் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது வெள்ளிக்கிழமை தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. இரண்டாவது மின்னாக்கியில் 32 மெகாவாட் மின்சாரமும், மூன்று, நான்காவது மின்னாக்கிகளில் தலா 40 மெகாவாட் என மொத்தம் 112 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com