ஆருத்ரா, ஹிஜாவு போன்ற மோசடிகளுக்கு மூளையாக இருந்த ஒரே ஏஜென்டுகள்: அதிர்ச்சித் தகவல்

ஆருத்ரா, ஹிஜாவு போன்ற மோசடிகளுக்கு மூளையாக இருந்த ஒரே ஏஜென்டுகள்தான் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
ஆருத்ரா, ஹிஜாவு போன்ற மோசடிகளுக்கு மூளையாக இருந்த ஒரே ஏஜென்டுகள்: அதிர்ச்சித் தகவல்

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளுக்கு மூளையாக செயல்பட்டது ஒரே ஏஜென்ட்கள்தான் என பொருளாதார குற்றபிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த மோசடி விவகாரத்தில் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர்கள், தலைமறைவானவர்களை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து பல கோடி ரூபாய் பணம்பணம், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோசடி விவகாரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏமார்ந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி, மாதம் 3 ஆயிரம் 5,000 கட்டினால் அதிக வட்டி தரப்படும் எனக் கூறி மோசடி செய்து பல்லாயிரம் மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நிறுவன உரிமையாளர்கள் அதில் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்களில் மோசடியில் ஈடுபடுவதற்கு மூளையாக செயல்பட்டது ஒரே ஏஜெண்டுகள் தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நிறுவனங்கள் தொடங்கப்படும் போது அந்தந்த நிறுவனங்கள் ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கொடுத்து 100 முதல் 200 நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்க வேண்டுமென தெரிவித்ததன் அடிப்படையில் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து அந்த ஏஜெண்டுகள் அதிகப்படியான வருமானங்கள் ஈட்டியவுடன் வேறு மோசடி நிறுவனத்திற்கு சென்று இதே போன்று அங்கேயும் மக்களை ஏமாற்றி மூளை சலவை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததுள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

100 முதல் 200 நபர்களை மோசடி நிறுவனத்தில் இணைத்துவிட்டு மீண்டும் வேறொரு மோசடி நிறுவனத்திற்கு சென்று அங்கேயும் இதே ஆள்களைக் கொண்டு சென்று சேர்த்ததும் ஒரே ஏஜென்ட்தான் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக ஆருத்ரா,ஹிஜாவு, ஐ எஃப் எஸ் மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏஜென்ட்கள் மூலம் தங்கள் நிறுவனங்களை பெருக்குவதற்காக இது போன்ற மோசடிகளில் ஈடுபட வைத்து ஏஜன்டுகளுக்கு கமிஷன் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற வேலைகளில் ஈடுபட்ட ஏஜென்ட்கள் யார் என்பது குறித்து விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சேகரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com