எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா? - குஷ்பு பேட்டி

விஜய் தற்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அதற்குள் ஏன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு

வேலூர்: விஜய் தற்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அதற்குள் ஏன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற குஷ்பு, கூட்டத்திற்காக திமுகவுக்கு கமல்ஹாசன் தேவை என்று விமர்சித்தார்.

வேலூர் தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் சுமார் 27,000 சதுர அடி நிலப்பரப்பில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம்,இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,"பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்லும் பாஜக ஏன் கூட்டணிக்காக தேடுகிறார்கள் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோமே. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்.

கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். திமுகவில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. திமுகவில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் நினைத்துள்ளார். முதல்வர் போனால் கூட்டம் வராது. கூட்டத்திற்காக முதல்வருக்கு கமல்ஹாசன் தேவையா?

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு
நாற்பதும் நமதே! நாடும் நமதே! - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வேலூர் தொரப்பாடியில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலூர் தொரப்பாடியில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையால் நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்கள். கடந்த 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை கடந்த 10 ஆண்டுகளில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழகத்தில் 1967-க்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் சொந்த காலில் நிற்க முடியவில்லையே ஏன்?. காமராஜர் பெயரை வைத்து காங்கிரஸ் பிச்சை எடுத்து வருகிறது என கடுமையாக விமர்சித்த குஷ்பு, தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுதான் காங்கிரஸ் பயனடைந்து வருகிறது. தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனியாக போட்டியிட்டிருக்கலாமே?

தொடர்ந்து பேசிய குஷ்பூ, அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்து விட்டதா?. இப்போதுதானே கைது செய்யப்பட்டுள்ளார். இனிமேல்தானே தொடர்புடையவர்கள் பெயர்கள் விவரங்கள் வரும். வரட்டும் பிறகு பேசுவோம் என்றார்.

பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதை திமுகவினர் விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு, "பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து திமுக பயப்படுகிறது. மோடி வரும்போது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படுகிறது. அவர் தமிழகம் வருவதில் அவர்களுக்கு என்ன வருத்தம். திமுகவினர் பயத்தில் தான் இது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள்"என்றார்.

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு
தேர்தல் பத்திரங்கள்: உச்ச நீதிமன்றம் நாளை என்ன முடிவு செய்யப் போகிறது?

மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு,"பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன்.நாடு முழுவதும் பிரசாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரசாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன்" என்றார்.

வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏசிஎஸ் என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புரட்சித்தலைவர் தொடங்கி, புரட்சித்தலைவி, கலைஞர், கமலஹாசன் என விஜய் வரை அனைவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மற்றும் அன்பு இருந்தது.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிகனாக வந்த பிறகு தானே அரசியலுக்கு வந்தார். ஏன் முதல்வரும் நடிகனாக வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார். அதற்குப் பிறகுதானே அரசியலுக்கு வந்தார்.

எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தற்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அதற்குள்

ஏன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். முயற்சி செய்து வரட்டும்.2026-ஐ பற்றி 2026-இல் பேசுவோம் என குஷ்பு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com