தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-இல் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-இல் வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்.

இதை புதுதில்லியில் வாக்குப்பதிவு தேதிகளை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுமென எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை அறிவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

நான்கு மாநில பேரவைத் தேர்தல்: ஒடிசா பேரவைக்கு 4 கட்டங்களாக தேர்தல்

ஆந்திரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 13 ஆம் தேதியும், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியும், ஒடிசாவில் 4 கட்டங்களாக மே 13 ஆம் தேதி 28 தொகுதிகளுக்கும், மே 20 இல் 28 தொகுதிகளும், மே 25 இல் 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1 இல் 42 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-இல் வாக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் மார்ச் 20, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28, வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 30, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:

தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி.

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை நாள்: ஜூன் 4

வேட்பு மனு தாக்கல்: மார்ச் 20

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 27

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாள்: மார்ச் 28

வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்கு எண்ணிக்கை நாள: ஜூன் 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com